புத்தக அறிமுகம் |
பூக்கள் நாளையும் பூக்கும் |
முதற்பதிப்பு |
ஜூன் 2012 |
விலை |
ரூ. 50 |
வெளியீடு |
விஜயா பதிப்பகம் |
மொத்த பக்கங்கள் |
112 |
அணிந்துரை அளித்தவர் |
திரு.த.உதயச்சந்திரன், இ.ஆ,ப., திரு.ஈரோடு தமிழன்பன், திரு. சங்கர சரவணன்
|
சமர்ப்பணம் |
மனைவியைக் காதலிக்கும் எல்லோருக்கும் |
ஆசிரியரது வாழ்வில் நேற்று இன்று நாளை என எப்பொழுதும் புன்னகை பூக்கள் பூக்க செய்து நேச மனம் வீசி சுவாசமாகி நிற்கும் அவரது அன்பு மனைவிக்காக ஆசையோடு அறிவியலையும் கலந்து அழகாக தொடுக்கப்பட்ட பாமாலைதான் பூக்கள் நாளையும் பூக்கும். ஆசிரியரின் கல்லூரிக் கால கவிதைகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன. அணிந்துரைகளின் அற்புத வரிகளிலிருந்து அறியலாம் கவிதைகளின் சுவையை.
பூக்கள் நாளையும் பூக்கும் என்ற ஒற்றை வார்த்தையில் நாளைய வாழ்க்கையை புன்னகையோடு எதிர்கொள்ள நம்பிக்கையைத் தருவதோடு அறிவியலையும் காதலோடு இரசிக்க கவிதையோடு கற்றுத் தந்திருக்கிறார்.
பொதுவாகவே காத்திருப்பு என்பது சற்று கடினமானதே அதிலும் காதலில் சொல்லவே வேண்டாம்... ஆனால் காத்திருப்பையும் காதலிக்கும் கவிஞரின் அழகான வரியையும், கால் முளைத்து சென்ற கவிதையையும், சட்டைப்பையை தாண்டி இதயப் பையில் இருக்கும் ஓவியத்தையும், கணிணிக்கும் காதல் வரும் கைவிரல்களைப் பற்றிய கவியாடலையும் காண வாருங்கள்.
"ஒளி ஆண்டு" - உன்னோடு பேச நினைத்து விட்டுப்போன வாக்கியங்களின் நீளம்.. என்று ஒரு அழகான கவிதையோடு ஒளி ஆண்டு பற்றி விளக்கும் ஒரு அறிவியல் விளக்கப்படத்தையும் இணைத்து அறிவியலும் உணர்வியலும் இணைந்த எண்ணற்ற கவிதைகளை அழகாய் வடித்திருக்கிறார் ஆசிரியர்.