புத்தக அறிமுகம் |
உயிர் தேடும் உள்ளம் |
முதற்பதிப்பு |
மே 2016 |
விலை |
ரூ. 120 |
வெளியீடு |
அகநி வெளியீடு |
மொத்த பக்கங்கள் |
144 |
சமர்ப்பணம் |
அனைத்து அறிவியல் ஆர்வலர்களுக்கும் |
கதைதான் படித்தோமா அல்லது ஏதாவது ஒரு கனவு உலகிற்கு சென்று வந்தோமா என்று வியக்க வைக்கிறார் ஆசிரியர். இயற்கை ஆர்வலரான கதிரேசன் அம்லா காடுகளுக்கு பயணம் சென்றிருக்கையில் தன் மனைவி பத்மினியின் வாயிலாக தமிழ், கமழ் என்ற தனது குழந்தைகளுக்கு வரலாறு, இலக்கியம், அறிவியல் மூன்றோடு ஒரு முக்கோண காதலையும், அனுமரின் இனத்தை சேர்ந்த வாயில்லா ஜீவனின் எல்லையற்ற அன்பையும் இணைத்து சொல்லப்பட்ட இணையற்ற கதைதான் உயிர் தேடும் உள்ளம்.
தங்கையை தோளில் சுமந்து கொண்டு கரடியிடம் இருந்து தப்பிக்க கொல்லிமலை காடுகளில் ஓடிய செல்வன், விஞ்ஞானத்தின் உச்சத்தை தொட்டு விண்வெளியில் பறந்தது எப்படி? செல்வனும், சரவணனும் காதலிக்கும் ஜெனிலியா, அவர்கள் கண் முன்னே 2026 இல் இறந்து போய்விட, காதலியின் உடலை 28 வருடங்கள் கிரையோனிக்ஸ் முறையில் பாதுகாக்கும் சரவணன், அந்த உடலுக்கு உயிரை எப்படியாவது திரும்ப கொண்டுவருவேன் என்று ஸ்பேஸ் ஸிப்பில் பயணத்தை தொடங்கிய செல்வன். செல்வன் திரும்பி வந்து திருமூலரின் கூடு விட்டு கூடு பாயும் வித்தையையும் அறிவியலையும் ஆராய்ந்து ஜெனிலியாவுக்கு உயிர் தந்தாரா, அது யாருடைய உயிர் அதை எப்படிக் கொண்டு வந்தார்? இதற்கிடையில் செல்வன் தன்னை காதலித்த தேவகியின் காதலை அறிந்தாரா, தேவகிக்கு எண்ணாயிற்று. செல்வனுக்கு உற்ற நண்பராக இருந்து உதவிய முருகன் I & முருகன் II யார், அஸ்ட்ராய்டு கூட்டம், மின்காந்த அலைகள் மற்றும் கருந்துளைகளிலிருந்தும் செல்வன் பயணித்த இராஜாளி விண்வெளி ஓடம் தப்பித்தது எப்படி என தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
மேலும் என்கிரிப்ஷன், கிராவிட்டி, கிரையோஜெனிக்ஸ், crowd sourcing, Time Dilation, ஃபைட் ஆர் ஃப்ளைட் ரெஸ்பான்ஸ், சர்வைவல் இன்ஸ்டிங்ட் இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை தன்னுள் கொண்டுள்ளது இப்புத்தகம்.