புத்தக அறிமுகம் |
: |
படிப்படியாய் படி |
முதற்பதிப்பு |
: |
ஏப்ரல் 2015 |
மூன்றாம் பதிப்பு |
: |
செப்டெம்பர் 2017 |
விலை |
: |
ரூ. 130 |
வெளியீடு |
: |
விகடன் பிரசுரம் |
மொத்த பக்கங்கள் |
: |
159 |
அணிந்துரை அளித்தவர் |
: |
திரு.த.உதயச்சந்திரன் |
சமர்ப்பணம் |
: |
லாஸ்ட் பெஞ்சுக்கார சகோதர சகோதரிகளுக்கு! |
இந்தப் புத்தகத்தை ‘காகித சினிமா’ என்று அழைக்கிறார் எழுத்தாளர். படித்தால்... பொறிபறக்கிற மாதிரி படிக்க வேண்டும் என்று சொல்கிற முதல் அத்தியாயத்தில், ஆசிரியர்... பக்கம் 46 ல் எந்த சூழ்நிலையில் படிக்கலாம் என்று சொல்லவரும் பொழுது, கிட்டத்தட்ட எல்லா சூழ்நிலையிலும், யார் வேண்டுமானாலும், எந்தப் பாடத்தை வேண்டுமானாலும், எப்படி நன்றாகப் படிக்கலாம்? என்று யோசிக்க ஆரம்பிக்க வைக்கிறார். ஆனந்தகுமார் 2019 ஜூன் வரை, எழுதியுள்ள 7 புத்தகங்களில், முதலாவது புத்தகம், அதுவும் நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது என்பதனால்... இதுவே, அதிக அளவில் விற்பனையாகியுள்ளது, என்றும் கூறலாம். இந்த ஆசிரியரது பிற புத்தகங்களைக் காட்டிலும் பரவலாக அறியப்பட்டுள்ள புத்தகம் இதுவாகும். போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்கள் மட்டுமின்றி பொழுதுபோக்காகப் படிப்பவர்கள் கூட எப்படிப் படிக்கலாம் என்று ஒரு ஐடியா! கொடுக்கும் நோக்கில் ஜாலியாக எழுதப்பட்டது.
படிப்பதில் என்னங்க ஜாலி! வரும்?
என்று கேட்பவர்கள் இந்தப் புத்தகத்தை ஒரு முறை படித்துப் பார்க்கலாம். ஒரு கால்நடை மருத்துவரது கல்விப் பயணத்தின் பொழுது கண்டெடுத்த முத்துக்களை பகிர்ந்து கொள்கிற முயற்சியே இது. இறுதியில் ஒன்பது... படிப்பதற்கான உத்திகளை... பரிட்சை எப்படி எழுதவேண்டும் என்கிற ஆலோசனை உட்பட பகிர்ந்துகொண்டுள்ளார் ஆசிரியர். எழுத்து நடையைப் பற்றிக் கூறவேண்டும் என்றால்... கூடவே எழுந்து நடக்க வைக்கின்ற மாதிரியான செயல்முறை நடை... இனி... இப்புத்தகத்தைப் புரட்டிப் பார்க்க என்ன தடை?