புத்தகம் |
: |
படித்தாலே இனிக்கும் |
வெளியீடு |
: |
NCBH பதிப்பகம் |
முதல் பதிப்பு |
: |
ஜூலை 2017 |
பக்கங்கள் |
: |
120 |
விலை |
: |
ரூ 100 |
கருத்து |
: |
படிப்பு |
படித்தாலே இனிக்கும் என்கிற புத்தகம் தலைப்பிற்கேற்ப படிக்கின்ற பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக எழுதப்பட்ட புத்தகமாகும். “படித்தாலே தங்கம் போல ஜொலிக்கலாம்” என்கிற தலைப்பில் இந்தப் புத்தகத்துக்குள்ளே ஒரு அத்தியாயம்... இருக்கிறது...
அது உண்மைதானா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... அதில் வருகிற புல்லட் கிருஷ்ணா? யார்? என்பது இன்னொரு பக்கம் இருக்கட்டும்...
என்ன படித்தால் இனிக்கும்?
என்கிற கேள்விக்கு... நாம் எதைப் படித்தாலும் இனிக்கின்ற மாதிரி எப்படிப் படிப்பது... என்று கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் எழுதி முடித்த... குறைந்த பட்ஜெட் குறும்படம் போன்றது இந்தப் புத்தகம்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ் பரிட்சையில் பாஸ் பண்ணிய அனுபவத்தை வைத்து இன்னும் படித்துக்கொண்டு இருக்கின்ற மாணவ மாணவியர்களுக்கு... எல்லாவிதமான பாடங்களையும் எப்படி நன்றாகப் புரிந்து படிக்கலாம் என்று அறிவுரை கூறுவதுதான் இந்தப் புத்தகம் ஆனால் அறிவுரை என்றாலே கசக்கும்! என்கிற பொதுவான நம்பிக்கையை உடைத்து இனிப்பாக ஐடியா தருவது இந்தப் புத்தகம். அதனால்தான் புல்லட் கிருஷ்ணா! (பக்கம் 47), மைக்கேல் ஜோர்டான் (பக்கம் 81), பரோட்டாக் கடை (பக்கம் 72), ஓ.ஜி. சார் (பக்கம் 73) என்று சமகாலத்தில் இருக்கின்ற செய்திகளையும் மனிதர்களையும் இந்தப்புத்தகம் குறிப்பிடுகிறது. சுய முன்னேற்றதிற்கு சுயமாகத்தான் முயற்சிக்க வேண்டும்... அதற்கு நிறைய படிக்க வேண்டும்! படித்தாலே இனிக்க... படிக்க வேண்டும்.